Sunday, February 1, 2009

ரத சப்தமி - 2-02-09


இன்று ரத சப்தமி : மகா புருஷர் பீஷ்மர் மறைந்த நாள். இந்த நாளில் ஆறு , கடல் , மற்றும் இது போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராட நம் பாவங்கள் கரைந்து மறையும்.

இன்று
எருக்கு இலையை பறித்து வந்து தலையில் வைத்து பின் நீராட, தலையில் இருந்து, பாதம் வரை வழிந்து ஓடும் எருக்கம் இலையோடு நம் பாவங்களும் கரைந்து ஓடும் என்பது முன்னோர் வாக்கு.

எருக்கம்
இலை மிக அதிக அளவிலான சூரிய கதிர்களை தன் அகத்தே உள் வாங்கும் தன்மை கொண்டது. இந்த நாளில் இத்தன்மை மேலும் அதிக அளவு அதிகரிக்கிறது. அதனால் மேற்சொன்ன முறைப்படி செய்தால் நம் உடலுக்கு தேவையான சில சூட்ச்சம சக்தி கிடைக்க பெற்று அதன் காரணமாக நம் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

சூரியனார் கோயில் ஸ்தல விருச்சம் எருக்கம் செடி என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைவரும்
பயன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
சந்திர அருண்

No comments:

Post a Comment