Sunday, January 25, 2009

ஸ்ரீ வாராகி மந்திரம்


மகா பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
வாராகி
போத்ரினி
சிவவார்தாளி
மகாசேனா
அஞ்சநாசகரேஸ்வரி
அரிக்னி
நாராயணி
நமக!!!

Monday, January 19, 2009

pancha bootha koilkal


பஞ்சபூத ஸ்தலங்கள்

சிதம்பரம் -ஆகாயம்
திருவண்ணாமலை - நெருப்பு
திருவானைக்காவல் - நீர்
திருகாளஹஸ்தி - வாயு
காஞ்சிபுரம் - மண்

நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்பது நாம் அறிந்ததே, நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களுக்கும் தனி தனியே கோயில்கள் அமைத்து வழிபட்டனர். மேலே பஞ்சபூத கோயில்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நமது உடலில் இதன் சம நிலை பாதிக்க பட்டு இருப்பது ஜாதகத்தின் வாயிலாக அறிய முடிகிறது. அதனை சம நிலை படுத்த மிக எளிய வழி முறைகள் உள்ளன.

பஞ்ச பூத கோயில்கள் பற்றி விரிவாக. பல அறிய விஷயங்களை பற்றி பின்னர் இங்கு எழுத உள்ளேன்.

Sunday, January 18, 2009

பதினெட்டு சித்தர்கள்

சித்தர்கள் - பிறந்தமாதம் - நட்சத்திரம் - சித்தியான ஸ்தலம்

ஸ்ரீ பதஞ்சலி -- பங்குனி-- மூலம்-- ராமேஸ்வரம்

ஸ்ரீ அகத்தியர்-- மார்கழி-- ஆயில்யம்-- திருவனந்தபுரம்

ஸ்ரீ கமலமுனி-- வைகாசி-- பூசம்-- திருவாரூர்

ஸ்ரீ திருமூலர்-- புரட்டாசி-- அவிட்டம்-- சிதம்பரம்

ஸ்ரீ குதம்பை -- ஆடி-- விசாகம்-- மயிலாடுதுறை

ஸ்ரீ கோரக்கர் -- கார்த்திகை --ஆயில்யம்-- பேரூர்

ஸ்ரீ தன்வந்தரி --ஐப்பசி --புனர் பூசம் --வைத்தீஸ்வரன்கோயில்

ஸ்ரீ சுந்தரானந்தர்-- ஆவணி-- ரேவதி-- மதுரை

ஸ்ரீ கொங்கணர் --சித்திரை -- உத்திராடம்-- திருப்பதி

ஸ்ரீ சட்டமுனி -- ஆவணி-- மிருகசீரிடம்-- திருவரங்கம்

ஸ்ரீ வான்மீகர் -- புரட்டாசி --அனுஷம் --எட்டுக்குடி

ஸ்ரீ ராமதேவர் --மாசி --பூரம் --அழகர்மலை

ஸ்ரீ நந்தீஸ்வரர் -- வைகாசி --விசாகம் -- காசி

ஸ்ரீ இடைக்காடர் --புரட்டாசி-- திருவாதிரை-- திருவண்ணாமலை

ஸ்ரீ மச்சமுனி --ஆடி --ரோகினி-- திருப்பரங்குன்றம்

ஸ்ரீ கருவூரார்-- சித்திரை --ஹஸ்தம் --கருவூர்

ஸ்ரீ போகர்-- வைகாசி --பரணி --பழனி தில்லை

ஸ்ரீ பாம்பாட்டி --கார்த்திகை-- மிருகசீரிடம் --சங்கரன் கோயில்

கொன்றை வேந்தன்


முறையான, நெறிதவறாத வாழ்கைக்கு கொன்றை வேந்தன் வழி நடப்போம். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இதனை சொல்லித்தரவேண்டும் . நல் ஒழுக்கம் தனை சிறு வயதிலேயே விதைத்து விட்டால் பின்னாளில் நம் குழந்தைகள் இந்தியாவின் சிறந்த குடிமக்களாக உருவாக வழிபிறக்கும். சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே என்பர். எனவே உங்கள் விடுமுறை நாளில் இதற்கென நேரம் செலவு செய்யுங்கள் வளமான சமுதாயம் உருவாக, பின்னாளில் நிம்மதியாக வாழ, அன்புடன் இம்மாதிரி நல்ல பலவற்றையும் சொல்லி தாருங்கள்.


கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அகமும் காசும் சிக்கெனத் தேடு

ககர வருக்கம்

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
15. காவல்தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீ¡¢யம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை

சகர வருக்கம்

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்
நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
53. நூல்முறை தொ¢ந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீராகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை

பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தொ¢யும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணி பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூ¡¢யோர்க்கு இல்லை சீ¡¢ய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்
மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மா¡¢ அல்லது கா¡¢யம் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு

வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்

ஒவ்வையார் வழி நடந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்க்கள். சிறு வயது பாடம், மனதில் நிறுத்தி வெற்றிகரமான வாழ்வை அடைவோம்.

ஓம் மகா கணபதி சரணம்


திகடச் சக்கர செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயக
ளகட சக்கர வின்மணியாவுரை
விகட சக்கரன் மெய்பதம் போற்றுவோம்.

காசிப முனிவர் அருளிய இம் மந்திரத்தை தினமும் ஏழு முறை ஜபித்தால் வறுமை, பிணி , அகலும் இருபத்தியொரு முறை நித்தம் இருபத்தியொரு தரம் ஜபித்தால் அனைத்தும் கைகூடும் .

Monday, January 12, 2009

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன் ஸ்ரீ வாராகி ஜோதிடாலயம்

Saturday, January 10, 2009

நவ கிரகம் - தானியம்


சூரியன் -------------------------கோதுமை
சந்திரன் -------------------------நெல்
செவ்வாய் ----------------------துவரை
புதன் ---------------------------- பச்சைப்பயறு
குரு------------------------------ கொண்டைகடலை
சனிஷ்வரன் ------------------- எள்ளு
ராகு ----------------------------- உளுந்து
கேது ---------------------------- கொள்ளு

ராசி மற்றும் லக்னத்திற்கு தக்க அதற்கான தானியத்தை அதிக அளவில் உணவுடன் உட்கொள்ளவும். தசா மற்றும் புத்திகளுக்கு ஏற்ப தானமாக தரவும்.